BBC News Tamil's user profile page. Match highlights, posts and more on site!“” Report User |
டி20 போட்டிகளைப் பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணி கத்துக்குட்டி அல்ல என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. டி20 தொடரின் சூப்பர் 8 ஆட்டத்தில் பலமான ஆஸ்திரேலிய அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது அரையிறுதி வாய்ப்பை ஆப்கானிஸ்தான் தக்க வைத்துக் கொண்டுள்ளது. #Afghanistan #Australia #India இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றுக்கு நகர்ந்துவிட்டது. முன்னதாக,லீக் சுற்றில் நான்கு பிரிவுகளிலும் முதல் இரு இடங்கள் பிடித்த அணிகள் இந்த சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. குரூப் ஏவில் இந்தியாவும், குரூப் பியில் ஆஸ்திரேலியாவும், குரூப் சியில் ஆப்கானிஸ்தானுக்கு குரூப் டியில் தென்னாப்பிரிக்கவும் முதல் இடம் பெற்றன. தற்போது சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகளில் தலா நான்கு அணிகள் உள்ளன. சூப்பர் 8 சுற்றின் குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இப்போது முக்கிய கேள்வி என்னவென்றால், குரூப் டியில் முதலிடம் வந்த தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றில் ஏன் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பெறவில்லை என்பதுதான். அதற்கான விளக்கத்தை இந்த காணொலியில் பார்க்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு #Cricket #T20WorldCup #Sports To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil
36 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு வெறும் 40 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தார். பாகிஸ்தானுக்காக ஸ்கோர்போர்டில் அதிக ரன்களை சேர்த்திருந்ததும் அவர் தான். வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பாகிஸ்தானை தடுத்துநிறுத்த பும்ராவை அழைத்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா. 15 ஆவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தே ரிஸ்வானின் கணிப்பை பொய்யாக்கியதோடு அவரது பேட்டையும் ஏமாற்றி ஸ்டம்புகளையும் பதம் பார்த்தது #T20WorldCup #India #Pakistan இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
India vs England: விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்திருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. #IndvsEng #Cricket #India Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர் என்ன நடந்தது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம் #WestIndies #Australia #ShamarJoseph #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
Mumbai Indians Captain Change Reason: Rohit Sharma Mumbai Indians-ல் அப்படி என்ன சாதித்தார்? Hardik Pandya Captain ஆக்கப்பட்டது ஏன்? #RohitSharma #IPL #Cricket Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
29வது ஓவரில் கேன் வில்லியம்சன் மிட் ஆனில் ஓங்கி அடித்த பந்து நேராக ஷமியின் கைக்குச் சென்றது. ஆனால் ஷமி அந்த முக்கியமான கேட்சைப் பிடிக்க முடியாமல் நழுவவிட்டார். கேன் வில்லியம்சனும், டேரைல் மிட்செல்லும் கர்ஜித்துக் கொண்டிருக்க, கேட்சை கோட்டைவிட்டது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயங்களை ஏறத்தாழ சுக்குநூறாக்கியிருக்கும். ஆனால் தமது தவறுக்கு பிராயச்சித்தமாக ஷமி செய்தது கேன் வில்லியம்சனை மாத்திரம் வீழ்த்தியதல்ல. மொத்தமாக 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றி இந்திய அணியின் வெற்றிக்கு துருப்புச் சீட்டாக மாறியிருக்கிறார். #India #Cricket #NewZealand Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil
ஒருபக்கம் ஆட்டத்தை சீரியஸாக அணுகிக் கொண்டிருந்தது நெதர்லாந்து அணி... மற்றொரு பக்கம், கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலி உள்பட பேட்டிங்கில் கைத்தேர்ந்தவர்களை பந்துவீச அழைத்துக் கொண்டிருந்தார். ஆம், நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் பந்து வீசியது மொத்தம் 9 பேர். விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலையும் ஆட்டத்தில் அதிக ரன்களை சேர்த்த ஷ்ரேயாசையும் தவிர்த்து இதர வீரர்கள்ள் அனைவருமே பந்துவீசினர். #India #WorlCup #India Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil