Pakistan vs South Africa 3rd T20 | South Africa tour of Pakistan | 2021 | PAK vs SA #PakistanvsSouthafrica#PAKvsSA#T20#2021#SouthafricatourofPakistan Sports news Sports news in Tamil Cricket news Cricket news in Tamil Cricket latest news Cricket latest news in Tamil Breaking sports news Breaking cricket news World in Fingertips
ஐபிஎல் தொடரில் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா | Punjab Kings vs Kolkata Knight Riders | IPL | 21st Match #ipl#PBKSvsKKR#21stMatch ஐபிஎல் தொடரின் 21-வது இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. நாணயசுழற்ச்சியில் வெற்றி பெற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களான அகர்வால் 31 ஓட்டங்களையும்,ஜோட 30 அதிகப்பட்சமாக அணிக்கு பெற்று கொடுத்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கட் இழப்புக்கு 123 ஓட்டங்களை குவித்தது. பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களான கிருஸ்ணா 3 விக்கட்டுகளையும், நரேன் மற்றும கமீன்ஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளையும், சிவம், மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினர், அடுத்து துடுப்பாட்டம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணில் திரிபத்தி 41, மோகன் 47, அதிகப்பட்சமாக அணிக்கு பெற்று கொடுத்தனர். பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களான தீபக், ஷமி, சிங், மொய்ஸஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.4 ஓவரில் 5 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களை குவித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது.
படிக்கல், கோலி அதிரடி! ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் | Royal Challengers Bangalore vs Rajasthan Royals | IPL | 2021 #ipl#RCBvsRR#16thMatch மும்பை மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான செம்சன் 21, சிவம், 46 ஓட்டங்களையும், ரியான் 25 ஓட்டங்களையும், டிவாட்டியா 40 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்று கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் சிராஜ் மற்றும் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜெமிசன், ரிச்சட்சன், சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி 72 ஓட்டங்களையும், படிக்கல் 101 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.3 ஓவரில் 181 ஓட்டங்களை குவித்து 10 விக்கட்டுகளில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.
இன்று 474 ஓட்டங்களை குவித்த பங்களாதேஷ் | Bangladesh vs Sri Lanka | 1st Test | 2nd day #TestMatch#SriLanka#Bangladesh#1stInnings இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது நாள் போட்டி இன்று நடைபெற்றது. நேற்றைய நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கட் இழப்புக்கு 302 ஓட்டங்களை குவித்தது. இன்று 2ஆவது நாள் ஆட்ட முடிவில் சென்டோ 163 ஓட்டங்களுடனும், மொமினோல் 127 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆட்டமிளந்தனர். இதேவேளை, ரகிம் 43 ஓட்டங்களுடனும், லிட்டோன்டாஸ் 25 ஓட்டங்களுடனும் ஆட்டமிளக்காமல் உள்ளனர். இன்றைய நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் அணி 155 ஓவர் முடிவில் 4 விக்கட் இழப்புக்கு 474 ஓட்டங்களை குவித்தது. மேலும், இலங்கை அணியில் பந்து வீச்சில் லகிரு குமார மற்றும் டீ சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி | Mumbai Indians vs Sunrisers Hyderabad | IPL | 2021 | 9th Match #ipl#MIvsSRH#MumbaiIndians#SunrisersHyderabad#9thMatch#2021 ஐ.பி.எல். போட்டியில் 9-வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. முதலில் நாணயசுழற்ச்சியில் வென்று மும்மை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான டீ கொக் - 40 ஓட்டங்களையும், ரோகித் -32 ஓட்டங்களையும், பொலாட் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக அணிக்கு பெற்று கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்புக்கு 150 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றனர். பந்து வீச்சில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் வீரர்களான முஜிப் மற்றும் சங்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும், ஆமட் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர். 151 என்ற வெற்றி இழக்கை நோக்கி சன்ரைசஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் வீரர்களான பெய்ஸ்டோ 43 ஓட்டங்களையும், வோனர் 36 ஓட்டங்களையும், சங்கர் 28 அதிகப்பட்சமாக பெற்று கொடுத்தனர். பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான போல்ட் மற்றும் ச்சகார் தலா 3 விக்கட்டுகளையும் பும்ரா மற்றும் குருனால் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர். சன்ரைசஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அதிரடி வெற்றி! | Chennai Super Kings vs Punjab Kings | IPL | 2021 #ipl#CSKvsPBKS#ChennaiSuperKings#PunjabKings#2021 ஐபிஎல் தொடரின் 8ஆவது போட்டி மும்பையில் நடைபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. நாணய சுழற்ச்சியில் வெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிளக்க ஷாருக் கான் அணிக்காக 47 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்புக்கு 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான சாஹர் 4 விக்கட்டுகளையும், சேம் கரன் , மொகின் ,ப்ராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். 107 ஓட்டங்களை வெற்றி இழக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களான மொகின் 46 ஓட்டங்களையும், டியு பிலஸிஸ் 36 அதிகப்பட்சமாக பெற்று கொடுத்திருந்தனர். பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்களான சமி 2 விக்கட்டுகளையும், முருகன், அர்ச்சிடீப் சிங் ஆகியோர் தலா ஒவ்வறு விக்கட்டுகளையும் வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 15.4 ஓவரில் 4 விக்கட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியின் 200 ஆவது போட்டி இதுவாகும்.
Australia vs New Zealand 2nd T20 | 25.02.2021 #AustraliavsNewZealand#NewZealand#Australia#MartinGuptill#Twenty 20 பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், நியூஸிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 97 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் டேனில் சேம்ஸ், ஜெய் ரிச்சட்சன் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மார்கஸ் ஸ்டொயினிஸ் 78 ஓட்டங்களையும் ஜோஷ் பிலிப்பே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மார்டின் கப்டில் தெரிவுசெய்யப்பட்டார். Sports news Cricket news World in Fingertips New Zealand won
Bangladesh vs West Indies | 2nd Test | 2nd day | West Indies tour of Bangladesh 2021 #BangladeshvsWestIndies#Testmatch#BanvsWI #Bangladesh#WestIndies