படிக்கல், கோலி அதிரடி! ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூர் | Royal Challengers Bangalore vs Rajasthan Royals | IPL | 2021 #ipl#RCBvsRR#16thMatch மும்பை மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. நாணய சுழற்ச்சியில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களான செம்சன் 21, சிவம், 46 ஓட்டங்களையும், ரியான் 25 ஓட்டங்களையும், டிவாட்டியா 40 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்று கொடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களை எடுத்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பில் சிராஜ் மற்றும் பட்டேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், ஜெமிசன், ரிச்சட்சன், சுந்தர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். இதையடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான விராட் கோலி 72 ஓட்டங்களையும், படிக்கல் 101 ஓட்டங்களையும் அதிரடியாக குவித்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.3 ஓவரில் 181 ஓட்டங்களை குவித்து 10 விக்கட்டுகளில் அதிரடி வெற்றி பெற்றுள்ளது.