Content removal request!


Australia vs New Zealand 2nd T20 | 25.02.2021 - ஆஸ்திரேலியாவை 4 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து

Australia vs New Zealand 2nd T20 | 25.02.2021 #AustraliavsNewZealand​#NewZealand#Australia#MartinGuptill#Twenty 20 பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியாவை 4 ஓட்டங்களால் வீழ்த்திய நியூஸிலாந்து அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், நியூஸிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மார்டின் கப்டில் 97 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், கேன் ரிச்சட்சன் 3 விக்கெட்டுகளையும் டேனில் சேம்ஸ், ஜெய் ரிச்சட்சன் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 220 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மார்கஸ் ஸ்டொயினிஸ் 78 ஓட்டங்களையும் ஜோஷ் பிலிப்பே 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், மிட்செல் சான்ட்னர் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 50 பந்துகளில் 97 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட மார்டின் கப்டில் தெரிவுசெய்யப்பட்டார். Sports news Cricket news World in Fingertips New Zealand won