ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அதிரடி வெற்றி | Mumbai Indians vs Sunrisers Hyderabad | IPL | 2021 | 9th Match #ipl#MIvsSRH#MumbaiIndians#SunrisersHyderabad#9thMatch#2021 ஐ.பி.எல். போட்டியில் 9-வது போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதியது. முதலில் நாணயசுழற்ச்சியில் வென்று மும்மை இந்தியன்ஸ் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான டீ கொக் - 40 ஓட்டங்களையும், ரோகித் -32 ஓட்டங்களையும், பொலாட் 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக அணிக்கு பெற்று கொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட் இழப்புக்கு 150 ஓட்டங்களை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றனர். பந்து வீச்சில் சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் வீரர்களான முஜிப் மற்றும் சங்கர் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும், ஆமட் ஒரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர். 151 என்ற வெற்றி இழக்கை நோக்கி சன்ரைசஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் வீரர்களான பெய்ஸ்டோ 43 ஓட்டங்களையும், வோனர் 36 ஓட்டங்களையும், சங்கர் 28 அதிகப்பட்சமாக பெற்று கொடுத்தனர். பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான போல்ட் மற்றும் ச்சகார் தலா 3 விக்கட்டுகளையும் பும்ரா மற்றும் குருனால் தலா ஒவ்வொரு விக்கட்டினையும் வீழ்த்தியிருந்தனர். சன்ரைசஸ் ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.