அமைச்சருக்கு கொரோனா | Minister Dayasiri Jayasekara - Covid-19 | Sooriyan Fm | Rj Chandru
அமைச்சருக்கு கொரோனா | Minister Dayasiri Jayasekara - Covid-19 | Sooriyan Fm | Rj Chandru

அமைச்சருக்கு கொரோனா | இனி கட்டணம் இல்லை | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj State Minister Dayasiri Jayasekara tests positive for Covid-19. "I didnt attend Parliament" இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK



இலங்கையின் அபாய பிரதேசங்கள் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru
இலங்கையின் அபாய பிரதேசங்கள் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru

இலங்கையின் அபாய பிரதேசங்கள் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் காணப்பட்ட தாழமுக்கம் இன்று காலை 5.30 அளவில் திருகோணமலை கரையிலிருந்து தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தொலைவில் பதிவாகியுள்ளது. இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூறாவளியானது வடமேல் திசையில் பயணித்து நாளை மாலை வேளையில் மட்டக்களப்பு மற்றும் பருத்திதுறைக்கு அருகில் இலங்கையின் கிழக்கு கடற்பரப்புக்கு பிரவேசிக்கும். இதன் காரணமாக நாளை மறுதினம் வரையில் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ------------------ கொவிட் -19 பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்து தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்,என்ற நிலைப்பாட்டில் ஒரு நீதியரசர் இருந்துள்ளதாகவும். 2 நீதியரசர்கள் வழக்கை விசாரணைக்கு ஏற்காமலே தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தமையால், வழக்கு விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ------------------ கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது. புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் - கல்வி அமைச்சர். G. C. E. O/L Examination cannot be held as scheduled and a new date will be announced 06 weeks ahead of the examination : Education Minister ------------------ 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK



ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru
ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru

ஒரே நாளில் 8 கொரோனா மரணங்கள் | Sooriyan Fm | Rj Chandru நாட்டில் நேற்றைய தினம் பதிவான 473 கொவிட்-19 நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். 138 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் 63 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேரும், பதிவாகியுள்ளனர். இன்று காலை வரையான நிலவரப்படி, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொடை மீன்சந்தைக் கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 431 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 3 ஆயிரத்து 59 பேர் மினுவாங்கொடை கொத்தணியிலும், 16 ஆயிரத்து 372 பேர் பேலியகொடை, கொத்தணியிலும் பதிவாகியுள்ளனர். இந்த இரண்டு கொத்தணிகளிலும் 12 ஆயிரத்து 793 பேர் இதுவரையில் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய நாள் வரையில் 22 ஆயிரத்து 501 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. 410 நேற்று குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 168 பேர் நாட்டிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை, வடமாகாணத்தில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ---------------- 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK



நாடு திரும்பும் நிர்க்கதியான இலங்கையர் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru
நாடு திரும்பும் நிர்க்கதியான இலங்கையர் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru

நாடு திரும்பும் நிர்க்கதியான இலங்கையர் | Sri Lanka Tamil News | Sooriyan Fm | Rj Chandru கொரோனா வைரஸ் உலகப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவரும் வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார். இந்தியா, டுபாய், மாலைதீவு, சீனா முதலான நாடுகளில் இருந்து இன்றைய தினம் இலங்கையர்கள் நாடுதிரும்ப உள்ளனர். இன்று டுபாயிலிருந்து 440 பேரும், சீனாவில் இருந்து இராணுவ உத்தியோகத்தர்கள் உட்பட 108 பேரும் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அதேபோன்று மலைத்தீவில் இருந்து 200 பேர் வரையிலும், இந்தியாவின் விசாகப்பட்டிணத்தில் இருந்து மேலும் 164 பேரும் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இதற்கமைய நான்கு குழுக்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இதேவேளை, கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 12 குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக உள்ளது. இந்த நிலையில், இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 576 ஆக அதிகரித்துள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களிக் எண்ணிக்கை 252 ஆக குறைவடைந்துள்ளது. இதேநேரம், இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் தனிமைப்பத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 68 பேர் இன்றைய தினம் வீடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது. இதேநேரம், இராணுத்தினரால் முன்னெடுக்கப்படும் 33 தணிமைப்படுத்தல் மையங்களில் ஆயிரத்து 856 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 1- Facebook - https://www.facebook.com/SooriyanFMSr... 2 -Twitter - https://twitter.com/SooriyanFMlk 3- Instagram - https://www.instagram.com/sooriyanfmlk/ 4- Youtube - https://www.youtube.com/SooriyanFMLK





Popular Tags

#Shot Goals  #Chris Paul  #Stephen Curry  #Football Defensive Skills  #Franck Ribery  #Mesut Ozil  #Kobe Bryant  #David Silva  #Tristan Thompson  #Michael Jordan  

Popular Users

#ddlovato  #BarackObama  #akshaykumar  #MichelleDBeadle  #RobGronkowski  #oldhossradbourn  #incarceratedbob  #cesc4official  #mcuban  #SHAQ  #Kaepernick7  #justinbieber  #ArianaGrande  #YouTube  #darrenrovell